இலங்கை
பிரதமர் ஹரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!
அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசியலமைப்பு குறித்து பிரதமர் கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
குருணாகலை – பன்னல பிரதேசத்தில் வைத்து இன்று (29) முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக தாம் நியமித்த உதய ஆர்.செனவிரத்ன நிபுணர் குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவும் அங்கம் வகித்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, அமைச்சரவையின் அங்கீகாரம், அமைச்சரவை தீர்மானம் மற்றும் அமைச்சரவைப் பத்திரம் என்பனவற்றைப் பெற்று முறையான முறையில் உரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.