இலங்கை
நாட்டுக்கு வருகைத் தந்துள்ள அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
நாட்டுக்கு வருகைத் தந்துள்ள அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
இம்மாதத்தின் இதுவரையான நாட்களுக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 20 நாட்களில் மாத்திரம் 85,836 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
இவர்களுள் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.