இலங்கை

அரிசி கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

Published

on

அரிசி கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளின் அடிப்படையில் நாட்டரசிக்குத் தட்டுப்பாடு இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

 

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்ற வகையில் சந்தையில் அரிசி விலையைத் தீர்மானிக்கும் சக்தியை அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஒரு போதும் வழங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த நாட்களில் கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக விலையில் அரிசி சந்தையில் விற்பனை செய்யப்பட்டமையால் அதற்குத் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

 

இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது சந்தையில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளை அரசாங்கம் சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version