இலங்கை

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

Published

on

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கோருமாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) அறிவிக்க இன்று (28) நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, CEB அண்மையில் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

 

முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் இன்று PUCSL அதிகாரிகளால் கலந்துரையாடப்பட உள்ளதாக PUCSL நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

ஆணைக்குழுவுக்கு கூடுதல் திருத்தங்கள் தேவைப்பட்டால், மேலும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், இலங்கை மின்சார சபைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தங்கள் மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.

 

இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 22.5% மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.

 

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version