இலங்கை

12 வருட தோல்வி காணாத வரலாற்றை தாமே முறித்துக்கொண்ட இந்திய அணி

Published

on

12 வருட தோல்வி காணாத வரலாற்றை தாமே முறித்துக்கொண்ட இந்திய அணி

தமது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் தோல்வி காணாத இந்திய அணியின் 12 வருட வரலாறு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

நியூஸிலாந்து (New Zealand) அணியிடம் இந்திய அணி தொடர் தோல்வியை கண்ட பின்னரே இந்த வரலாறு முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி இந்திய (India) அணி 2012ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்து அணியிடம் இந்திய மண்ணில் வைத்து தொடர் தோல்வியை சந்தித்திருந்தது.

இந்தநிலையில் நியூஸிலாந்து அணியின் இந்த வெற்றியை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் டெஸ்ட் 2025 செம்பியன்சிப் கிரிக்கெட் புள்ளிகளின்படி நியூஸிலாந்து அணி, மேலும் சில புள்ளிகளால் உயர்ந்துள்ளது.

எனினும் புள்ளிப்பட்டியலில் அந்த அணி நான்காம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டுள்ளது.

புள்ளிப்பட்டியலின்படி, இந்திய அணி தொடர்ந்தும் 62 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது அவுஸ்திரேலியா 62 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை வகிக்கிறது

இலங்கை 55 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை வகிக்கிறது நியூஸிலாந்து அணி, நான்காவது இடத்தில் 50 புள்ளிகளுடன் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து 6 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 7 ஆம் இடத்திலும், பங்களாதேஸ் 8 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கி;ந்திய தீவுகள் அணி 9 ஆம் இடத்தை வகிக்கிறது.

Exit mobile version