இலங்கை

கண்டி – பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Published

on

கண்டி – பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

இலங்கையில் இஸ்ரேலியர்கள் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடுத்து, விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் பயிற்சி அமர்வுக்கு முன்னதாக பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை (26) நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில், இரு அணிகளும் இன்று மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ளன.

 

இதேவேளை, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் வசதி வழங்கும் கண்டியில் உள்ள பல ஹோட்டல்களின் பாதுகாப்பு பொலிஸாரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பிலான தினசரி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

கண்டி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்த விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கு மேலதிகமாக, தொடர்ச்சியான பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version