இலங்கை

விசேட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு நீதிமன்றம்

Published

on

விசேட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு நீதிமன்றம்

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதி தற்போது விசேட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நேற்றிரவு மட்டக்களப்பு பொலிஸாருக்கு கடிதமொன்று கிடைத்துள்ளது.

 

இதன்படி உடனடியாக பொலிசார் நீதிமன்ற பதிவாளர் நீதவான் தொலைபேசிக்கு உடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கியதுடன், கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

 

அப்பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்

 

இந்நிலையில் இன்று (25.10.2024) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மோப்பநாய் சகிதம் பலத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

 

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24) இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து, அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று சம்பவதினமான இரவு வந்ததையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு அறித்துள்ளார்.

 

இதனையடுத்து, நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டிடத்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அத்துடன், இன்று வெள்ளிக்கிழமையில் இருந்து இந்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

 

இதேவேளை, மட்டக்களப்பில் சியோன் தேவலாய குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சாரான் காசிமின், ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version