இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசுக்கு ரணில் விடுத்த சவால்

Published

on

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

 

அரச ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

 

தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “அரச ஊழியர் சம்பள உயர்வை வழங்க வேண்டும், அந்த சம்பள உயர்வை கொடுக்கலாம், உரிய பரிசீலனைக்கு பிறகே இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்த்தோம்.

 

அடுத்த ஆண்டுக்குள் நமது அரசாங்க வருவாய் பன்னிரெண்டு சதவீதத்தில் இருந்து பதின் மூன்று சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும், அதன்படி இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.

 

உரிய சம்பள உயர்வை வழங்க பணம் உள்ளது, பணம் இல்லை என்று சொன்னால் அது ஒரு விசித்திரக் கதை. சம்பள உயர்வுக்கு எங்கிருந்து பணம் வரும் என்பதை அரசு விளக்க வேண்டும்.

Exit mobile version