இலங்கை

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

Published

on

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), இனவாதத்தைப்பற்றி பேசி மக்கள் மத்தியில் எவ்வாறு வாக்கு சேகரித்தாரோ அதுபோல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) மக்கள் மத்தியில் இனவாதத்தை பற்றி பேசியே வாக்கு சேகரிக்கின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

 

குறித்த விடயத்தை நானு ஒயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு தேர்தலிலும் முக்கிய பங்கை வகித்தது இந்த ஈஸ்டர் தாக்குதல். அந்த ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் அனைவரும் ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என கம்மன்பில அறிவித்திருந்தார். தற்போது இது ஒரு புதுக் கதையாக இருக்கிறது இரண்டு தேர்தலிலும் இந்த இரண்டு ஜனாதிபதிகளும் இதனை பயன்படுத்தியே வந்துள்ளனர்.

 

நாம் தற்போதய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுபலத்தையும் வழங்கினால் அவர் நினைத்ததை வைத்து செயல்படுவார். ஆகவே ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு செயற்பட வேண்டும்.

Exit mobile version