இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் தமது கட்சியும் பேச்சு நடத்தமுடியும்: சஜித் விளக்கம்

Published

on

சர்வதேச நாணய நிதியத்துடன் தமது கட்சியும் பேச்சு நடத்தமுடியும்: சஜித் விளக்கம்

தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் செய்யத் தவறிய விடயங்கள் தொடர்பில், இந்த பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பொரளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச, எதிரணியில் இருந்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, ஐக்கிய மக்கள் சக்தி பல புரிந்துணர்வுகளை எட்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

2028 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கை போராடி வருகிறது.

இந்தநிலையில், பொருளாதார நிலைமை சவாலானதாக உள்ளது என்றும், வலுவான பொருளாதார வளர்ச்சி மூலோபாயம் தேவை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Exit mobile version