இலங்கை

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

Published

on

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படுமாயின் அது பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களின் வழக்குகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காரணமாக பல பேரின் வழக்குகளில் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்காது, ஆதாரங்களை சரியாக பரிசீலிக்காமையினால் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் போலியான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மிக இலகுவாக பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவினை பொறுத்தமட்டில் ஏனைய நாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விடயத்தில் இதுவரை அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கையர்கள் பலர் நாடு கடத்தப்படும் பட்சத்தில் அநுரவின் ஆட்சிக்கு அவை ஆபத்தாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version