இலங்கை

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் : டக்ளஸ் தெரிவிப்பு

Published

on

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (17) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில், யாழ் தேர்தல் தொகுதியில் கணிசமான ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

இலங்கையில் ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பார் என நாங்கள் எதிர்பார்த்து ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டு இருந்தோம்.

ஆனாலும் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்பி கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்திருக்கின்றார்கள்.

ஜே.வி.பிக்கும் எங்களுக்கும் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு உள்ளது. மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும்.

அதாவது அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் அதில் ஒரு அரசியல்வாதி தன்னுடைய பார் லைசன்ஸை வெளியிட வேண்டாம் என்று கேட்டிருக்கின்றார்.

சக வேட்பாளர் அவற்றை வெளியிட வேண்டும் என கேட்டு இருக்கின்றார். நான் அவ்வாறு கேட்கவில்லை. இந்திய கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக பேசவுள்ளேன்.

நாங்கள், ஆட்சியில் சம்பள உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போதைய ஜனாதிபதி சம்பள உயர்வு தற்போதைக்கு சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.பொருட்களின் விலைகள் சரியாக குறைக்கப்படவில்லை.

அதைவிட இவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதிக கடன்களை பெற்றிருக்கின்றார்கள் எதிர்காலத்தில் பழையபடி வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை கூட ஏற்படுகின்றதோ தெரியாது.

இந்நிலையில், நாம் எதிர்காலத்தில் தென்னிலங்கையுடன் அரசியல் கலந்துரையாடல்களை செய்யவிருக்கின்றோம்” என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version