இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள நாமல்

Published

on

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள நாமல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குருடாகவும் செவிடாகவும் செயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் இன்று (18) தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை வெளியீடு கட்டுப்பாட்டை மீறியுள்ளது.

“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கையில் விடுபட்ட பக்கங்கள் இன்னும் இருப்பதாக ஒரு கருத்து நிலவி வரும் நிலையில், அரசாங்கம் அதனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அரசாங்கம் அறிக்கைகளை வெளியிடுவதில் குருடாகவும் செவிடாகவும் செயல்படுகிறது.

வெறும் பேச்சு மாத்திரமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சந்தேகங்கள் நிறைந்திருக்கும் விடயங்களில் அரசாங்கம் பதில் சொல்வது அவசியமானது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 அறிக்கை மற்றும் குறித்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

எனினும், இது தொடர்பில் கடந்த (14) ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila), விசாரணை அறிக்கையில் எந்த பக்கங்களும் காணாமல் போகவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இதுவரையில், வெளியிடப்படாத ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான இரண்டு அறிக்கைகள் ஜனாதிபதியின் வசமுள்ளதாகவும், 7 நாட்களுக்குள் ஜனாதிபதி அவற்றைப் பகிரங்கப்படுத்தாவிட்டால் தாம் அவற்றை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நாமல் ராஜபக்ச குற்றம் இவ்வாறனதொரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையினை வெளியிடுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version