இலங்கை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தனது கடமைகளை இன்று (18) பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission) தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
இது தொடர்பான பதவி விலகல் கடிதங்கள் நேற்று (14.10.2024) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampad Amaratunga) மற்றும் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பி. உடவத்த (B. Udawaththa) ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் தமது பதவிவிலகல் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
2020 இல் நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.