இலங்கை
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் அரச வருமானங்கள் 40.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்னரான வரவு செலவுத் திட்ட நிலைமை என்ற தலைப்பில் அறிக்கையொன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி 2024 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் வரி மற்றும் வரியல்லா வருமானம் உள்ளிட்ட அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2557.79 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காலப்பகுதியில் மொத்த வரி வருமானமாக 2348 பில்லியன் ரூபா பதிவாகியுள்ளதுடன் அதில் 624 பில்லியன் ரூபா வருமான வரி என்பதுடன் 1421 பில்லியன் ரூபா பெறுமதி சேர் வரி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கலால் வரி மற்றும் பெறுமதி சேர் வரி என்பனவற்றின் வருமானங்கள் கூடுதலாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.