இலங்கை

கோடீஸ்வர வர்த்தகரின் மகனால் வெளிநாட்டிலிருந்து வந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

Published

on

கோடீஸ்வர வர்த்தகரின் மகனால் வெளிநாட்டிலிருந்து வந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

கம்பளையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன் செலுத்திய ஜீப் வண்டி மோதி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை பேருந்து நிறுத்துமிடத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவைக்கு முன்பாக இன்று பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது, பின்னால் சென்ற ஜீப் வண்டி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றரை வயதான சிறுவன், கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து கம்பளை இல்லவத்துரு பிரதேசத்துக்கு வந்திருந்த மொஹமட் சிராஸ் அம்டே என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்த விபத்தினை ஏற்படுத்திய ஜீப் வண்டி அவ்விடத்தில் நிறுத்தாமல், சுமார் 55 மீற்றர் முன்னால் சென்று பழங்கள் விற்றுக்கொண்டிருந்தவர் மீதும் அவருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியின் மீதும் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version