இலங்கை
அநுர கட்சிக்குள் குடும்ப அரசியல்….! தென்னிலங்கை அரசியலில் குழப்பம்
அநுர கட்சிக்குள் குடும்ப அரசியல்….! தென்னிலங்கை அரசியலில் குழப்பம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் குடும்ப அரசியலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்பில் இரண்டு பட்டியல்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையே அதற்குக் காரணமாகும்.
தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க களுத்துறை மாவட்டத்திலும் அவரது மகன் சத்துரங்க அபேசிங்க கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
அதேவேளை, அவரது மனைவி சமன்மலி குணசிங்க கொழும்பு மாவட்டத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இலங்கையில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், ஊழலை அழிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.