இலங்கை

தமிழ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இரண்டு பௌத்த பிக்குகள்

Published

on

தமிழ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இரண்டு பௌத்த பிக்குகள்

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி என்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இரண்டு பௌத்த பிக்குகளை தேர்தலில் களமிறக்கியுள்ளது.

இதன்மூலம் பௌத்த பிக்குகளை களமிறக்கிய முதல் தமிழ் கட்சியாக, அந்த கட்சி தேர்தல் வரலாற்றில் இடம்பெறுகிறது.

பௌத்த பிக்குகளான கிரிபனாரே விஜித தேரர் மற்றும் உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சியில் பொதுத் தேர்தலில் போட்டியிட தாம் தீர்மானித்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் ஈபிடிபி பட்டியல் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.

Exit mobile version