இலங்கை

ரியாத் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் உடன் தரையிறக்கப்பட்டது

Published

on

ரியாத் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் உடன் தரையிறக்கப்பட்டது

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிச் சென்ற UL 265 என்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீள் தரையிரக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி சுமார் 19:00 மணியளவில் நேற்று (10.10.2024) இந்த விமானம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி தரையிறங்கியது.

விமானம், பயணத்தை தொடங்கி, நடுவானில் சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்புக்கு மீண்டும் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அடுத்த விமானத்திற்கு மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, “பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது, மேலும், இந்த நேரத்தில் அவர்களின் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்” என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், UL 265 விமானம் பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version