இலங்கை

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

Published

on

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனநாயகக் குரல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சி கொழும்பில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன்‌ ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கட்சியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மைக் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.

கட்சியின் வேட்பாளர்களாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலும் பல பிரபலங்கள் கட்சிக்குள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது. ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version