இலங்கை

இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்

Published

on

இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை தாமதமாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம், சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் அதேநேரம், இலங்கை பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுவரே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் விதிமுறைகளில் உள்ள வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை ஜனாதிபதி நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் சிலவற்றை, குறிப்பாக வரி அதிகரிப்புகளை பிற்போட்டு, அதன் மூலம், பொருளாதார நெருக்கடியுடன் போராடும் குடிமக்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை குறைக்கவும் அநுர நிர்வாகம் முயற்சிக்கிறது.

சர்வதேச நாணய நிதிய பணியாளர்களின் இலங்கை பயணத்தின் முடிவில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version