இலங்கை

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

Published

on

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

முட்டை விலை குறைவதானது உற்பத்தியாளர்களுக்கு பாதக நிலையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.வீ நிசாந்த விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 36 முதல் 37 ரூபாவை விடவும் குறைந்தால் அது முட்டை கைத்தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித் தீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கோழித் தீனியின் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் முட்டை ஒன்றின் விலையை 29 முதல் 30 ரூபா அளவில் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 32 முதல் 33 ரூபா செலவாகின்றது எனவும் இதில் அதிகளவு தொகை கோழி தீனி வகைகளுக்காக செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித்தீனியின் விலைகள் சோளத்தின் விலையில் கூடுதலாக தங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version