Connect with us

இலங்கை

நாட்டில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

19 2

நாட்டில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் நோயால் இறப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முதுகுட எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதத்தை விட எலிக்காய்ச்சல் நோயால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிக் காய்ச்சலானது எலிகளால் அல்லது வேறு சில விலங்குகளால்(மாடுகள், எருமைகள்) பரப்பப்படும் காய்ச்சலாகும்.

கிருமித்தொற்றுக்கு உள்ளான எலிகளின் சிறுநீர் ஊடாக எலிக்காய்ச்சலை உருவாக்கும் பக்டீரியா வெளிச்சூழுலுக்கு வந்து சேர்கின்றது.

அத்துடன் இது மனிதரில் இருந்து மனிதருக்கு தொற்றுவதில்லை எனவும் சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த பக்டீரியா தேங்கியுள்ள நீரை மனிதர்கள் அருந்துவதன் மூலம் இந்த தொற்றுக்கு உள்ளாக நேர்கின்றது.

காய்ச்சல், உடல் நோதல், தலையிடி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன், கண் சிவத்தல் சிறுநீருடன் இரத்தம் கசிதல் உள்ளிட்ட அறிகுறிகளையும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உணர முடியும்.

மேலும், இதற்குரிய சிகிச்சைப் பெற தவறினால், சிறுநீரகம், இதயம், மூளை, ஈரல் உள்ளிட்டவை பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோய் மேலும் தீவிரமடையும் போது மரணம் சம்பவிக்கக் கூடிய ஆபத்தும் உண்டு. எலிக்காய்ச்சலானது பக்டீரியாவால் ஏற்படுதால், அதனைக் குணப்படுத்துவதற்கு நுண்ணுயிர் கொல்லி(அன்ரிபயோற்றிக்) சிசிக்சை நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எலிக்காய்ச்சலானது உடலில் வெட்டுக் காயங்கள், கீறல்கள், கண்ணுக்குத் தெரியாத சிராய்ப்புகள் போன்றவற்றுடன் வயலில் வேலை செய்யும் போது எமது உடலினுள் பக்டீரியா உள்நுழைகிறது.

ஓடாத நீர் தங்கியுள்ள இடங்களில் குளிக்கும் பொழுது, கண்களிலுள்ள மெல்லிய படலங்கள் ஊடாக பக்டீரியாக்கள் உட்செல்கின்றன.

அத்துடன் எலியின் சிறுநீர் கலந்த நீரினை குடிப்பதற்கோ அல்லது வாய் கழுவுவதற்கோ பாவிக்கும் பொழுது எலிக்காய்ச்சலுக்கான பக்டீரியாக்கள் பரவுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பயிர்நிலம், வயல் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சுத்தமாக வைத்திருத்தல்.

பயிர் நிலங்களைத் தயார் செய்கையில் கை, கால்களுக்கு பாதுகாப்பு உறைகளை (சப்பாத்து, கையுறை) அணிந்து கொள்ளுதல்.

நீர் தேங்கியுள்ள இடங்களிலிருந்து நீர் வடிந்து செல்ல வழிவகை செய்தல். நீர் தேங்கியுள்ள இடங்களில் தேவையற்ற விதத்தில் இறங்குதல், குளித்தல், கை, கால், முகம், வாய் கழுவுதல் ஆகியவற்றை விலக்கிக் கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சல் பரவுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

இதேவேளை இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சில வாரங்களில் கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இந்தத் தொகையைக் குறைக்கத் தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 8.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு...