இலங்கை

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு புதிய திட்டம்!

Published

on

நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்துவது தொடர்பான பல புதிய திட்டங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலை நடாத்திய பின்னரே எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய அரசாங்கம் விவசாயம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பல மாற்றங்களை செய்து வருகின்றது.

இலங்கையில் விவசாயம் செய்வதற்கான இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதுடன் அதன் மூலம் நாட்டுக்கான வருமானத்தை ஈட்டும் பணியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version