இலங்கை

அநுரவின் குழு நியமனம் தொடர்பில் ரஹ்மானின் அதிருப்தி

Published

on

அநுரவின் குழு நியமனம் தொடர்பில் ரஹ்மானின் அதிருப்தி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டமையானது, பயனற்ற செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து ஆய்வு செய்ய குழுவை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நிதி விரயமாகும்.

இதற்கு பதிலாக அவர்களின் சலுகைகள் குறித்த அனைத்து தகவல்களையும் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் இருந்து ஜனாதிபதி பெற்றுக்கொள்ளமுடியும் என்று ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version