இலங்கை
கொரியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிதியுதவி
கொரியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிதியுதவி
இலங்கையின் அபிவருத்தி திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க கொரிய எக்ஸிம் வங்கி (Korea Eximbank) இணக்கம் தெரிவித்துள்ளது.
கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள், நேற்று (03.10.2024) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த இணக்கப்பாட்டினை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, இலங்கை பொருளாதார வீழ்ச்சியினை கருத்திற்கொண்டு எக்ஸிம் வங்கி அளித்த நிதி உதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குறித்த நிதியுதவித் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.