இலங்கை

இடைநிறுத்திய நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி

Published

on

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ​போது இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு, முதியோர் நலனோம்புகைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்ற போதும், தேர்தல் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கவில்லை.

இந்நிலையில், குறித்த திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்துவதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடாத நிலையிலும், அநுரகுமார தற்போது ஜனாதிபதியாக இருப்பதன் காரணமாக குறித்த திட்டங்கள் அவருக்கு தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்கை அதிகரிக்க உதவாது என்ற ரீதியிலும் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

Exit mobile version