இலங்கை
இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்களில் 20 வாகனங்கள் மட்டுமே அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களினால் அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களை உடனடியாக கைப்பற்றுவதோடு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பிரதம நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை சுங்கத்திற்கு கடத்தப்பட்ட பிராடோ, லேண்ட் க்ரஷர், வி8, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட 200 சொகுசு வாகனங்கள், சாதாரண வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சொகுசு வாகனங்களை உடனடியாக அரசிடம் ஒப்படைக்குமாறு உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.