இலங்கை

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு KTR தான் காரணம்.. சர்ச்சையை கிளப்பிய பெண் அமைச்சர்

Published

on

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு KTR தான் காரணம்.. சர்ச்சையை கிளப்பிய பெண் அமைச்சர்

நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யா இருவரும் கடந்த 2021ல் விவகாரத்தை அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.

அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் அமைச்சரான கொண்டா சுரேகா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சமந்தா – நாகா சைதன்யா விவாகரத்துக்கு KT ராமா ராவ் தான் காரணம். KTR செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் என சுரேகா கூறி இருக்கிறார்.

இந்நிலையில் சுரேகாவின் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜுனா ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

“உங்கள் அரசியலுக்காக சினிமா நடிகர்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர்கள் privacyக்கு மதிப்பு கொடுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என் குடும்பம் பற்றி பொய்யான குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல. உங்கள் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்” என நாகர்ஜுனா கோபமாக ட்விட் செய்திருக்கிறார்.

Exit mobile version