இலங்கை

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

Published

on

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அவரை தோழர் என அழைக்கலாம்,அதைவிடுத்து மாண்புமிகு தலைவர் என அழைக்கதேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் கே.டி. லால் காந்தா(K.D.  Lal Kanta) குறிப்பிட்டார்.

தேசிய பத்திரிகையொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க என்று கூறலாம். இப்போது அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி. அதற்கிணங்க, நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதி அநுர திஸாநாயக்க என்று அழைப்பது பொருத்தமானது.

அதைவிடுத்து மிக உன்னதமானவர், மாண்புமிகு ஜனாதிபதி, கௌரவமான ஜனாதிபதி, போன்ற கௌரவங்கள் நமது ஜனாதிபதிக்கு தேவையில்லை. நாட்டுக்கு தலைவனாக இருந்தாலும் அவர் மக்களின் சேவகன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version