இலங்கை

பெண்மணிக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தேன் – சி.வி.விக்னேஸ்வரன் வாக்குமூலம்

Published

on

பெண்மணிக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தேன் – சி.வி.விக்னேஸ்வரன் வாக்குமூலம்

கிளிநொச்சியில் (Kilinochchi) வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் (C. V. Vigneswaran) கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதியை தாய் தந்தை அற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக் கொடுத்தேனே அன்றி நான் எடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் இயங்கும் மதுபான சாலை ஒன்றுக்கான அனுமதி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் 2024.02.19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த மதுபானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்தவகையில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் (C. V. Vigneswaran) சிபார்சின் அடிப்படையில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அங்கஜன் இராமநாதனின் (Angajan Ramanathan) தந்தையின் சிபார்சின் பேரிலும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டதற்கான கடிதம் கூட வெளிவந்திருந்தது.

தமிழரசுக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்..

Exit mobile version