இலங்கை

அரச அதிகாரிகள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

Published

on

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய(harini amarasuriya (28) கண்டியில்(kandy) தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

கண்டியில் பௌத்த மத தலைவர்களை தரிசித்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் அளித்த பதில் வருமாறு,

பொதுத் தேர்தலுக்கான உங்களின் ஏற்பாடுகள் எப்படி உள்ளன

பொதுத்தேர்தலுக்கு நாம் நன்கு தயாராக வேண்டும், நாட்டை இன்னும் சிறப்பாக மாற்றக்கூடிய ஒரு அணி தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி:- மூன்று பேர் கொண்ட அமைச்சரவை நாட்டின் பொறுப்பை நிறைவேற்ற முடியுமா

பதில்:- இந்த நேரத்தில் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.என்றார்.

Exit mobile version