இலங்கை
இராணுவ – புலனாய்வு கட்டமைப்பில் மாற்றத்தை தாமதப்படுத்தும் அநுர
இராணுவ – புலனாய்வு கட்டமைப்பில் மாற்றத்தை தாமதப்படுத்தும் அநுர
இராணுவ – புலனாய்வு கட்டமைப்பில் மாற்றத்தை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வல்லரசு நாடுகளை பொறுத்தமட்டில் அநுரவின் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முயற்சித்து வருகின்றன. இருப்பினும் சீனாவினை புறம்தள்ளி இந்தியாவுடன் பயணிப்பதென்பது நடக்காத காரியமாகும்.
சீனாவினை முதலில் நம்பி இந்த அரசாங்கம் பயணிக்குமானால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே வெளிநாடுகளின் புலனாய்வு கட்டமைப்புக்களை முதலில் கண்காணிப்பதன் மூலம் சிறந்த மாற்றத்திற்கான அரசாங்கமாக செயற்பட முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் உலக நாடுகளுக்கு மாற்று கருத்துக்களை வெளியிட்ட தமிழ் சமூகம் 2009 பின்னர் தென்னிலங்கை அரசியலோடு இணைந்து செயற்படுவதாக தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு,கிழக்கில் கோட்டாபய ராஜபக்சவிற்கு அளித்த வாக்குகளை விட அநுர குமாரவிற்கு செலுத்தப்பட்ட வாக்குகள் குறைவாகவே உள்ளது.
தமிழ் மக்கள் கடந்த காலத்தில் வெளியிட்ட மாற்றுக்கருத்துக்களை பின்பற்றி தற்போது புதிய அரசாங்கம் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.