இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட மாற்றம்

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற காத்திருக்கும் வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்லைன் விசா வழங்கும் பணி நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் விசாவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதும் பாரியளவில் குறைந்திருந்ததுடன், இலங்கையின் நடைமுறைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் அமைந்துள்ள குடிவரவு திணைக்கள வளாகத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உத்தரவுக்கு அமைய, சர்ச்சைக்குரிய விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version