இலங்கை
புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சமன் ஏக்கநாயக்க
புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சமன் ஏக்கநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள் எவ்வித துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் உண்டு எனவும், இந்த வாகனங்களை யார் பயன்படுத்தினார்? என்ன தேவைக்காக பயன்படுத்தினார் என்பது குறித்த ஆவணங்கள் உண்டு எனவும் அதனை பார்த்தால் உண்மையை தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகாரிகள் சட்ட ரீதியாகவும் சரியான நடவடிக்கையாகவும் இந்த வாகனங்களை ஒப்படைத்துள்ளனர் என சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை தரித்து நிறுத்த இடவசதி போதவில்லை என்பதனால் அரசாங்கத்திற்கு சொந்தமான வேறும் இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வாகனமும் காணாமல் போகவில்லை எனவும் தற்போதைய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது அந்த நிகழ்வில் பங்கு பற்றியதாகவும் அப்போது தமது அதிகாரபூர்வ வாகனத்தை ஒப்படைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.