இலங்கை
அநுர குமாரவுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம்
அநுர குமாரவுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (anura kumara dissanayake)அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(nalin bandara) இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) சிறையில் அடைத்தல், கள்வர்களை பிடித்தல், அரச ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தொடர்பில் ஆரோக்கியமான எண்ணத்தைக் தாம் கொண்டிருப்பதாகவும் அவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் அவர்களினால் ஆட்சியை முன்னெடுக்க முடியாவிட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.