இலங்கை

தேர்தல் களத்தில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்: வைத்தியசாலையில் அனுமதி

Published

on

தேர்தல் களத்தில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்: வைத்தியசாலையில் அனுமதி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகக் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதியில் உள்ள மருதமுனை பொது நூலக முன்றலில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் வாஹிட் முகம்மது ஜெஸீல் என்பவரே தாக்குதலில் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத் தாக்குதல் தொடர்பில் கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் பெரிய நீலாவணை காவல்துறையினர் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் ஊடகவியலாளரின் கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் உடைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் பெரியநீலாவணை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version