இலங்கை

அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும்! ரிஷாட் பதியுதீன்

Published

on

அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும்! ரிஷாட் பதியுதீன்

அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புத்தளத்தில் நேற்று (17.09.2024) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“முஸ்லிம் தாய்மார்களின் கருவறைகளில் பயங்கரவாதம் உயிர்ப்படைவதாக நாடாளுமன்றத்தில் கூறியவர்தான் அநுரகுமார திசாநாயக்க.

ஈஸ்டர் தாக்குதல் காலங்களிலும், கோவிட் தொற்று நேரங்களிலும் அநுரவின் சுயரூபத்தைக் காணமுடிந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி எடுத்த நிலைப்பாட்டை நாம் மறக்க முடியாது.

ஜனாஸாக்களை எரிப்பதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல உதவியவர்கள் இவர்கள். பயங்கரவாதத்துடன் எமது இஸ்லாத்தை இணைத்துப் பேசியவர்களும் இவர்கள் தான்.

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எம்.பிக்கள் நாற்பது பேர், இன்றும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

வருடக்கணக்காக குற்ற ஆதாரங்களை வைத்துக்கொண்டு அலையும் இவர்களால், ஒரு கள்வனைகூட பிடிக்க முடியவில்லை. என்றார்.

Exit mobile version