இலங்கை
அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் : அநுரகுமார அறிவிப்பு
அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் : அநுரகுமார அறிவிப்பு
உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரியை முழுமையாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayaka) உறுதியளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அக்குரஸ்ஸவில் நடைபெற்ற பேரணியில் பேசிய திஸாநாயக்க, மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் தனது திட்டங்களை விளக்கியுள்ளார்.
அத்துடன் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள 10,000 ரூபாய் முதல் 17,500 ரூபாய் வரையிலான நிதியுதவி குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்த அவர், வளங்களைப் பிரிப்பதற்காக அவர்கள் அரசாங்கங்களை உருவாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
எனினும் தாம், அத்தகைய நடைமுறைகளை கைவிட்டு அரசியலை ஒரு பொது சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அநுரகுமார தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுமென திஸாநாயக்க உறுதியளித்தார்.