இலங்கை

போலியான கருத்து கணிப்புகள் : குடியுரிமை பறிபோகும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Published

on

தேர்தல் காலத்தில் வெளிவரும் போலியான கருத்து கணிப்புகள் மற்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்பவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால் அவருடைய பதவி பறிபோகும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் குடியுரிமை நீக்கம் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் அபாயம் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மொகமட் தெரிவித்தார்.

அவர் அளித்த சிறப்பு நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்து கணிப்புகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

என்னதான் கருத்து கணிப்புகளை மேற்கொண்டாலும் வாக்காளர்கள் வாக்களித்து இறுதியாக தேர்தல் முடிவுகளை ஆணைக்குழு வெளியிடும்போதே அதுதான் உத்தியோகபூர்வ முடிவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்தவை காணொளியில்…

Exit mobile version