இலங்கை

சஜித் மேடையில் ஏற்பட்ட குழப்பம்: பெண் அரசியல்வாதியின் எச்சரிக்கை

Published

on

சஜித் மேடையில் ஏற்பட்ட குழப்பம்: பெண் அரசியல்வாதியின் எச்சரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மேடையில் இரண்டு தரப்பினருக்கு இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பேரணியின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா மேடையில் இருந்து இறங்கும் வரை மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன, மேடைக்கு செல்ல மறுத்துள்ளார்.

லக்ஷ்மன் வசந்த பெரேரா தனது புகைப்படத்தையும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவையும் கூட்டத்தையும் காட்டும் வகையில் மக்கள் மத்தியில் தனது பெயர் தொப்பிகளை விநியோகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மேடையில் அமர்ந்திருந்ததால் கோபமடைந்த ரோஹினி, லக்ஷ்மன் வசந்த மேடையை விட்டு வெளியேறும் வரை மேடைக்கு வரமாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருவதற்கு முன்னதாகவே வசந்த பெரேரா மேடையை விட்டு வெளியேறியுள்ளார்.

அதற்கமைய, அவர் வெளியேறிய பின்னர் சஜித் பிரேமதாசவுடன் மேடையில் ஏறி, முன்வரிசையில் அமர்ந்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை முன்னிறுத்திக் கடுமையாகக் கருத்து தெரிவித்த அவர், பார் உரிமையாளர்களுக்கு, தனது மேடையில் இடமில்லை என தலைவர் சஜித் பிரேமதாச கூறியதாக ரோஹினி தெரிவித்தார்.

Exit mobile version