இலங்கை

ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் நீக்கம்: பொலிஸாரின் நடவடிக்கை

Published

on

ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் நீக்கம்: பொலிஸாரின் நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் குறித்து சட்டவிரோதமான வகையில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 627,300 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், 7,900 சுவரொட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 1,500 பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் 1,100 பதாகைகள் பொலிஸார் கைப்பற்றி வைத்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தம் 1,550 விளம்பர பதாகைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் 1,600 விளம்பர பதாகைகள் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளன.

அதுமாத்திரமன்றி, 7,600 விளம்பரங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ள நிலையில் 10,750 விளம்பரங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version