இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பார்களை விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டு

Published

on

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பார்களை விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர்களை விலைக்கு வாங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை விலைக்கும் வாங்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கிய போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என முசம்மில் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினால் அது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கி ஆதரவு திரட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்ய வேண்டுமென மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

முசம்மில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக நீண்ட காலம் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version