இலங்கை

அநுரகுமாரவுக்கு சாதகமாக மாறியுள்ள முக்கிய தீர்மானம்

Published

on

அநுரகுமாரவுக்கு சாதகமாக மாறியுள்ள முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு எவருக்கும் வாக்களிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டால் அது அநுரகுமாரவுக்குச் சாதகமாக அமையும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பேருவளையில் இடம்பெற்ற ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நாடு இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றது. இந்தப் பயணத்தை மாற்ற வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

கிறீஸிலும் இதேபோன்று பொதுவுடமை மாற்றம் வேண்டும் என்று சிலர் வந்தனர். அங்கிருந்து சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.

அதன்பின்னர், அந்த நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டனர். அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டுமா?

இலங்கையில் இன்று வடக்கு – கிழக்கு தமிழ் மக்களும், மலையகத் தமிழ் மக்களும், கொழும்பு மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே உள்ளனர்.

எனவே, ஜனாதிபதி ரணிலின் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது” என்றார்.

Exit mobile version