இலங்கை

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்

Published

on

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்பது வகையான ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வு அடையாள அட்டை, பிரதேச செயலகத்தினால் வெளியிடப்படும் வயோதிபர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வெளியிடப்படும் மதகுருமாறுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதி செய்யும் கடிதம், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் தற்காலிக அடையாள அட்டை மற்றும் விசேட தேவை உடையவர்களுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அடையாள அட்டைகள் எதுவும் இன்றி வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சரவை திணைக்கள மற்றும் அரசாங்க நிறுவனங்களினால் வெளியிடப்படும் சேவை அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்து வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற எந்த ஒரு ஆவணமும் வாக்குச்சாவடியில் ஏற்றுக் கொள்ளப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version