இலங்கை

இனம், மதம் குறித்து கவனம் செலுத்தவில்லை : கிழக்கில் ரணில் கருத்து

Published

on

இனம், மதம் குறித்து கவனம் செலுத்தவில்லை : கிழக்கில் ரணில் கருத்து

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாகவும், மதம் அல்லது இனம் குறித்து கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமது நோக்கம் வர்த்தகம் மற்றும் விவசாயத்தில் கவனம் செலுத்துவதுடன், அந்தத் துறைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே தவிர, மதம் அல்லது இனம் அல்ல என்று சாய்ந்தமருது மற்றும் கொக்காவிலில் நடைபெற்ற பேரணியில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை உறுதி செய்வதன் மூலம் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்க முடிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி காலத்தில் கிழக்கின் இந்தப் பகுதிகளுக்குச் சென்றமை நினைவிருக்கிறது.

இந்தநிலையில், அன்றைய நாட்களுடன் ஒப்பிடும் போது இந்த பிரதேசம் தற்போது மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது.

எனினும் கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யப் போவதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version