இலங்கை

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்!

Published

on

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் அவர் அநுரகுமாரவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ”இனவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக தமிழரசு கட்சி தனது முடிவை அறிவித்திருந்த நிலையில் சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழரசு கட்சியின் தலைவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க உள்ளார் என்பதை இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version