இலங்கை

சிறுவர்களுக்கு எதிரான இணையக்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு உதவும் அவுஸ்திரேலியா

Published

on

சிறுவர்களுக்கு எதிரான இணையக்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு உதவும் அவுஸ்திரேலியா

இணையத்தில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து போராடுவதில் இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்க, அவுஸ்திரேலிய பொலிஸார் முன்வந்துள்ளனர்.

இலங்கை (Sri Lanka) பொலிஸின் இரண்டு அதிகாரிகள், அவுஸ்திரேலிய (Australia) குயின்ஸ்லாந்தின் சிறுவர் சுரண்டல் எதிர்ப்புக் குழுவின் விசாரணையாளர்களை இது தொடர்பில் சந்தித்துள்ளனர்.

இணையங்களில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து எதிர்த்துப் போராடுவதில், இலங்கை பொலிஸின் சர்வதேச வலையமைப்பு முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதற்காக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு வாரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்தின் பிரதிப் பரிசோதகர் ரேணுகா ஜெயசுந்தர மற்றும் பொறுப்பதிகாரி காண்டீபன் சிறிவராஜ் ஆகியோர் அவுஸ்திரேலிய விஜயத்தில் இணைந்திருந்தனர்.

அவர்கள் இருவரும், புலனாய்வு அதிகாரிகளையும் சந்தித்தனர்.

இந்தநிலையில், தமது விஜயம் விலைமதிப்பற்றது என பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Exit mobile version