இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

Published

on

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாத இறுதியில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நிய கையிருப்பு , இந்த ஆண்டின் (2024) முதல் ஏழு மாதங்களில் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.

இதில் சீனாவின் மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச்செலாவணியும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களின் மொத்த வெளிநாட்டு கையிருப்பின் மூலம் ஈடுசெய்யக்கூடிய இறக்குமதியின் அளவு சுமார் 3.8 மாத இறக்குமதியாகும்.

கடந்த ஜூலை மாதம் உள்ளூர் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர அந்நிய செலாவணியாக கொள்வனவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version