இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

Published

on

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஒரு வாக்காளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்ததாகக் கண்டறியப்படுவார்களாயின் அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்கள், தமது பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்கு செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகையாக ரூபா 109 இனை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, குறித்த தொகையினை வேட்பாளர்கள் மீறும் பட்சத்தில், அவர்கள் தமது பதவியை இழப்பதுடன் மூன்று ஆண்டுகளுக்கு குடியுரிமை உரிமைகளையும் இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு பற்றிய விரிவான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கைகள் பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளில் பிழைகள் அல்லது தவறான தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் காவல்துறையினரினடம் முறைப்பாடு செய்து, வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version